நெல்லையில் கொலை மிரட்டல் வழக்கில் 3 பேர் கைது

நெல்லை மாநகரம் டவுண், பாறையடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது.
நெல்லையில் கொலை மிரட்டல் வழக்கில் 3 பேர் கைது
Published on

நெல்லை மாநகரம் டவுண், பாறையடி பகுதியை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன்(40) என்பருக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினை தொடர்பாக வேல்முருகன், முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முருகன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

முருகன் கொடுத்த புகாரின் பேரில் டவுண் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லை மாநகரம் பேட்டை, அசோகர் தெருவில் 8ம் தேதி, பேட்டையை சேர்ந்த முருகேசன்(37) என்பவரை, பேட்டையைச் சேர்ந்த சந்துரு(20), கார்த்திக்(19) ஆகிய 2 பேர் சேர்ந்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 வாலிபர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com