

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர், அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலைய நடைமேடையில் பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியும், ரெயில் பெட்டிகளில் உரசியும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கீரைபாக்கம் கிராமத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் மற்றும் எளாவூரைச் சேர்ந்த 2 பேர் என 3 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.