மின்னல் தாக்கி 3 மாடுகள் செத்தன

விக்கிரவாண்டி பகுதியில் மின்னல் தாக்கி 3 மாடுகள் செத்தன
மின்னல் தாக்கி 3 மாடுகள் செத்தன
Published on

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று முன்தினம் இடி- மின்னலுடன் மழைபெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(வயது 52) என்பவரின் மாட்டு கொட்டகை மற்றும் அருகில் உள்ள குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது, மின்னல் தாக்கியதில் கொட்டகையில் கட்டிபோடப்பட்ட பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுபற்றிய தகவலறிந்துவந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் தீயை அணைத்தனர். அதேபோல் பூண்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ், கப்பியாம்புலியூரை சேர்ந்த சுகுமார் ஆகியோருக்கு சொந்தமான தலா ஒரு பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இது பற்றி அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த அறிக்கையின் பேரில் தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com