3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி ஐ.பி.எஸ்., காவல்துறை தலைமைய நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
Published on: 

சென்னை,

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3 அதிகாரிகள் பணி இடமாற்றம்

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசின் அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ரூபேஷ்குமார் மீனாவிற்கு பதில் குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக இருந்த ரூபேஷ்குமார் மீனா, திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி ஐ.பி.எஸ்., காவல்துறை தலைமைய நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com