வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் 3 லட்சம் பத்திரங்கள் பதிவு - தமிழக அரசு தகவல்

பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் வருகையில்லா பத்திரப்பதிவு முறைக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் 3 லட்சம் பத்திரங்கள் பதிவு - தமிழக அரசு தகவல்
Published on: 

சென்னை,

வருகையில்லா பத்திரப்பதிவு முறையில் 3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் நவம்பர் 17-ந்தேதி வரை, 3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரவேற்பு

பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் இந்த வருகையில்லா பத்திரப்பதிவு முறைக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், சுமார் 15 லட்சம் மக்களின் கால விரயம் மற்றும் செலவு குறைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 3 மாதங்களில் 1,357 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X