ரூ.13 லட்சத்தில் புதிய 3 மின்மாற்றிகள்; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் ரூ.13 லட்சத்தில் புதிய 3 மின்மாற்றிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ரூ.13 லட்சத்தில் புதிய 3 மின்மாற்றிகள்; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on

நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின்படி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின்படி, நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் ரசிகமணி டி.கே.சி. தெரு, கவிமணி தெரு, ராமலிங்கனார் தெரு ஆகிய 3 தெருக்களில் ரூ.13 லட்சம் மதிப்பில் புதிதாக 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

அதனை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரவடிவு, உதவி மின்பொறியாளர்கள் வெங்கடேஷ், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com