திருட்டு, கொள்ளை வழக்கில் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பணகுடி பகுதியில் 3 பேர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது.
திருட்டு, கொள்ளை வழக்கில் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்து ரமேஷ் (வயது 36), ராஜ்குமார் மகன் சரவணன்(35), ஜெயகுமார் மகன் பார்வதிமுத்து(26) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்சொன்ன குற்றவாளிகள் திருட்டு, கொள்ளை, வழிப்பறி மற்றும் மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன குற்றவாளிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 3 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com