திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரண்

பா.ஜ.க. நிர்வாகியின் கார், மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் 3 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
திண்டுக்கல் கோர்ட்டில் 3 பேர் சரண்
Published on

திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் பால்ராஜ். கடந்த 24-ந்தேதி அதிகாலையில் குடைபாறைப்பட்டியில் உள்ள அவருக்கு சொந்தமான குடோனிலில் இருந்த கார், 7 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ரங்கராஜ் முன்னிலையில் நேற்று திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஹபீப் ரகுமான் (வயது 27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகியோர் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் பா.ஜ.க. பிரமுகரின் கார், மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் சரண் அடைந்திருப்பதாக மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com