சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா.
சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த பூமாலை மகன் கருத்தாப்பிள்ளை (வயது 39), பொன்னுசாமி மகன் முனுசாமி (50), வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி கன்னிகா (49) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, நாவப்பிள்ளை ஆகியோர் நேரில் சென்று அந்த 3 பெட்டிக்கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com