சிறுமியை கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமியை கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமியை கடத்திய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
Published on

விக்கிரமசிங்கபுரம் கட்டாம்புளி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் சங்கர் கணேஷ் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் கடந்த 11-2-2020 அன்று 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பஸ்சில் கடத்தி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் கணேசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி அன்புசெல்வி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட சங்கர் கணேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com