30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேளாங்கண்ணியில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

வேளாங்கண்ணி:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படி வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள ஆரியநாட்டுதெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com