35 மதுபாட்டில்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
35 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை டவுன் சப்-இன்ஸ்பெக்டர் உமாமாலனி தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கமுதியை சேர்ந்த வீரபாண்டி (வயது30) என்பதும், அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், வீரபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com