பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு விழா: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் 36-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு விழா: தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989-ம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 36-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொடி, தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com