குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 3,700 போலீசார் பாதுகாப்பு

குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா
Published on: 

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடக்கிறது. இதனை முன்னிட்டு குலசேக ரன்பட்டினத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறும் நாட்களான இன்று(திங்கட்கி ழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை மூன்று நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்காக வேறுமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி 4 போலீஸ் சூப்பி ரண்டுகள் தலைமையில் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 47 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரத்து 660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையணிந்த ஆண், பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையணிந்த ஆண், பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு

10 கண்காணிப்பு கோபுரங்கள், சுமார் 50 போலீஸ் உதவி மையங்கள், 7 நகரும்கண்காணிப்பு கேமிரா வாகனங்கள், 300-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 முக்கிய சாலைகளில் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக அறியும் ஏ.என்.பி.ஆர் கேமிராக்கள்பொருத்தப்பட்டு உள்ளன. குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு திரை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார்மூலம் கண்காணிப்பட்டு வருகின்றன.

மேலும் 5 டிரோன் கேமிராக்கள் மூலம்வான்வழி கண்காணிப்பு, 5 முக அடையாள கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அதில் 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் அவர்கள் கண்காணிப்பு கேமிராக்களின் பார்வைக்குள் வரும் பட்சத்தில் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com