தடை செய்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 4 பேர் கைது: ரூ.10,190 பறிமுதல்

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போலீசார், அங்கே சந்தேகப்படும்படியான 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தடை செய்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து நம்பர் எழுதிய துண்டு பேப்பர்கள், ரூ.10,190 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் அண்ணாநகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தடை செய்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை:

அந்த விசாரணையில் அவர்கள் 4 பேரும் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான கோபிகண்ணன் (வயது 34), நாராயணசாமி (40), முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜா(26) மற்றும் யோகீஸ்வரர் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(53) என்பதும், அவர்கள் 4 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது; ரூ.10,190 பறிமுதல்:

இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து நம்பர் எழுதிய துண்டு பேப்பர்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10,190 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com