தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை

4 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் அறிக்கையை அனுப்பியது
தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை
Published on

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார். இதற்கான தகவலை சட்டப்பேரவை செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ராஜினாமா

திருச்சி கிழக்கு தொகுதி ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ கயல்விழி செல்வராஜ், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பை தொகுதி எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா ஆகியோரின் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் அந்த தொகுதிகளும் காலியாகின. சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. எனவே திருச்சி கிழக்கையும் சேர்த்து , இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com