

சென்னை,
திருத்தணி முருகன் கோவிலில் பரிவார மூர்த்தி சிலைகள் விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 4 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
முருக பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வார விடுமுறை தினம் என்பதால் இன்று கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில், இன்று காலை பக்தர்கள் பொது வழியில் சாமி தரிசனம் செய்ய கோவில் உள்பிரகாரத்தில் உள்ள கோபுர வாசலில் நின்றிருந்த பக்தர்கள் தலையில் சுண்ணாம்பு சிலை கற்கள் விழுந்து 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் ஏற்பட்டது.
திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு யாழி சிலையை பிடித்து ஆட்டியதில் சிலை உடைந்து கற்கள் பக்தர்கள் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக உதவிக்கு கோவில் நிர்வாகம் வரவில்லை என பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.