தமிழகத்தில் மழை காரணமாக 4 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மழை காரணமாக 4 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
Published on

சென்னை,

இது குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 48 முகாம்களில் 881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5106 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை 44% அதிகமாக மழை பெய்துள்ளது.

வரும் 9ஆம் தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு உள்ள்து. என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் குழுவின் தயார்நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நிலையிலும் தயாராக உள்ளோம். மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்டவை தயார்நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com