

நெல்லை,
4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
பெண்களையும், குழந்தைகளையும் தவறான நோக்கில் அணுக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தண்டனை நினைவுக்கு வரவேண்டும். திறமையாக வாதாடி குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய அரசு வழக்கறிஞருக்கும், நீதித்துறைக்கும் மனமார்ந்த நன்றி..
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.