கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேரில் 4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
கோவை
Published on

கோவை,

நேபாளம் சென்ற 4 பேர் பாதுகாப்பாக உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடு ம்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 மத்திய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வெள்ளத்துடன் பாறைகள், மண் மரங்கள் உள்ளிட்டவைகள் கலந்து அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமனார்கள்.

இதனையடுத்து நேபாள ராணுவம், போலீசார், தேசிய பேரிடர் படையினர் மீட்புபடையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் - சகதிகள் முழுவதும் பரவி உள்ள நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் பலரது உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் - திபெத்தில் மொத்தம் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில் மீட்பு பணிகள் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளம் சென்ற 12 பேர் காணாமல்போனநிலையில், 4 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஐடிஎல் டூர் அண்ட் ட்ரெக்கிங் நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற தேவராஜ், லோகநாதன், சுவாமிநாதன், வேல்முருகன் நலமாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

X

Daily Thanthi
www.dailythanthi.com