திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலியில் கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரிடம் இருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் கருங்கல் திருடிய 4 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேலப்பிள்ளையார்குளம், தெற்கு தெருவை சேர்ந்த பழனி (வயது 39), அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(24), திருவேங்கடம், குண்டம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜ்(23), பலஸ்தினாபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(25) ஆகிய 4 பேரும் சேர்ந்து தெற்கு வாகைகுளம் அருகே கிட்டாச்சி மூலம் லாரியில் கருங்கல்லை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், அந்த 4 பேரையும் மானூர் காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பழனி, மணிகண்டன், முத்துராஜ், அந்தோணிராஜ் ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 5 யூனிட் கருங்கல், இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு கிட்டாச்சியை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com