சேலம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
சேலம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி சுபரஞ்சனா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர் மநபர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுபரஞ்சனா, மர்ம நபரை பிடிக்க முற்பட்டார். எனினும், அந்த நபர் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து சுபரஞ்சனா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com