சாலை விபத்துகளில் 439 பேர் சாவு

பொள்ளாச்சியில், கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 439 பேர் உயிரிழந்து உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலை விபத்துகளில் 439 பேர் சாவு
Published on

பொள்ளாச்சியில், கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 439 பேர் உயிரிழந்து உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். இதில் கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-

பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 879 விபத்துகள் நடந்து உள்ளன. இதில் 439 பேர் இறந்து உள்ளனர்.

ஹெல்மெட் அணிவது அவசியம்

விபத்துகளை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. அதில் தலையில் அடிப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com