நெல்லையில் 44 கிலோ புகையிலை பொருட்கள், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது

சுத்தமல்லி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையிலான போலீசார் கொண்டாநகரத்திலிருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் ரோட்டின் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் 44 கிலோ புகையிலை பொருட்கள், 2 பைக் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையிலான காவல்துறையினர் கொண்டாநகரத்திலிருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் ரோட்டின் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 38), பிரானூர், வல்லம் பகுதியை சேர்ந்த கைக்கொண்டான்(46) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 44 கிலோ 130 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த 2 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 44 கிலோ 130 கிராம் புகையிலை பொருட்களையும், 2 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com