பாரதிய ஜனதா கட்சியின் 47-ஆம் நிறுவன நாள்: அன்புமணி வாழ்த்து

பாரதிய ஜனதாவின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் என்று அன்புமணி கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் 47-ஆம் நிறுவன நாள்:  அன்புமணி வாழ்த்து
Published on

சென்னை,

பாரதிய ஜனதாக் கட்சியின் 47-ஆம் நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

‘பாரதிய ஜனதாக் கட்சியின் 47-ஆம் நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அக்கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலில் அரசியல் தளத்தில் அசாதாரணமான உயரங்களை அடைந்திருக்கும் பாரதிய ஜனதாவின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com