4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்

சரணடைந்த தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்த பள்ளியின் தாளாளாரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடன் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே அந்த தனியார் பள்ளியை சூழ்ந்த உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியை தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி இன்று மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்துள்ளார். சரணடைந்த தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com