தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர், ஸ்ரீவைகுண்டத்தில் தகராறு செய்து தாக்கிய வழக்கில் 3 பேர் என மொத்தம் 5 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக்(எ) அய்யாதுரை (வயது 27), வேல்முருகன்(34) ஆகிய 2 பேரும் கோவில்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்களான தண்டபாணி(23), மலையாண்டி(39), தங்கதுரை(எ) தங்கையா(22) ஆகிய 3 பேர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.

இதனை தொடர்ந்து மேற்சொன்ன 5 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி மேற்கு மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேற்சொன்ன இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோளின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 5 பேரையும் நேற்று ஒரே நாளில் சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com