ஏரியில் மூழ்கி 5 பேர் பலி! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு!

நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர்  விஜய்
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் செல்வி தேன்மொழி (வயது 22) மற்றும் அக்காப்பகத்தில் தங்கியிருந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் செல்வி விஜயலட்சுமி (வயது 16). த/பெ. வெங்கடேஷ், செல்வி அல்லி (வயது 14), த/பெ. வெங்கடேஷ், செல்வி பூமிகா (வயது 13), த/பெ. வெங்கடேஷ் மற்றும் நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி வள்ளியம்மாள் (வயது 16), த/பெ. சேகர் ஆகியோர் நேற்று (09.11.2026) காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் கிராம பெரிய ஏரியில் குளிப்பதற்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

நிதியுதவி

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X