

சேலம்,
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பு ரத்தினம். இவருடைய மனைவி விஜயா (வயது 67). இவர், 5 ரோடு தொழிற்பேட்டை எதிரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை 6.25 மணி அளவில் வழக்கம்போல் அவர் வேலைக்கு செல்வதற்காக சூரமங்கலம் மெயின்ரோடு பாரதி நகர் பகுதியில் பஸ்சுக்காக நடந்து சென்றார்.
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சத்தம் போட்டு கூச்சலிட்டதுடன் செயினை பறிப்பதை முடிந்த அளவுக்கு போராடினார். ஆனால் அவர்கள் விஜயாவின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி விட்டனர்.
இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது அவர், மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேரில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் மங்கி குல்லா அணிந்து இருந்ததாகவும் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், பாரதி நகர் பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் நகையை பறித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பட்டப்பகலில் வேலைக்கு சென்ற மூதாட்டியிடம் 5% பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.