5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 45 கி.மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் சீற்றம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் புயல் அபாயம் இருப்பதால் நேற்று வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com