சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை விதித்து திருவண்ணாமலை சிறப்பு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
Published on

வந்தவாசி தாலுகா வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 31).

இவர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி 9 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் நவீன்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நவீன் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதைத்தொடர்ந்து நவீன்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com