சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 23). இவர் கடந்த 25-8-2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தாய் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சரத்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com