

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக் கம். தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் இருப்பதாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் தமிழக அரசு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று மாலை வரை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பாக ஈரோடு அருகே உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் கலெக்டர் கந்தசாமி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள் ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
நீர்வளத்துறையினர் அறிக்கையின்படி அணையில் இருந்து கீழ்பவானி பிர தான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர் மான கால்வாய் மதகுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்க ளுக்கு சிறப்பு நனைப்பிற்காக இன்று (அதாவது நேற்று) முதல் 15 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.