

திருப்பூர்
இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருப்பூரில் ஆண்டுதோறும் ஐ.கே.எப். எனப்படும் ‘இந்தியா நிட்பேர்’ கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 53-வது ஐ.கே.எப். கண்காட்சி, அவினாசி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் இன்று தொடங்கி தொடர்ந்து 18-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், நாட்டின் பல்வேறு ஆடை உற்பத்தி மையங்களைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று, புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்துகின்றன.
மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் வர்த்தக முகமைகளின் பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் காட்சிப்படுத்தப்படும் ஆயத்த ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.