தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை (நவ 24ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரியிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com