சட்டசபை மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமனம்: யார்? யார் தெரியுமா...?

17-வது சட்டசபையின் மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
சட்டசபை மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமனம்: யார்? யார் தெரியுமா...?
Published on

சென்னை,

சட்டசபை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாதபோது, துணை சபாநாயகர் வழிநடத்துவார். இருவரும் அவையில் இல்லாதபோது. மாற்றுத் தலைவர்கள் அவையை நடத்துவார்கள். அந்தவகையில், 17-வது சட்டசபையின் மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதன்படி, மாற்றுத்தலைவர்களாக விஜய் சரவணன் (த.வெ.க.). சத்யபாமா (த.வெ.க.). மதார் பதுருதீன் (த.வெ.க.), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (தி.மு.க.), தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), தாரகை கத்பட் (காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

பொதுவாக, மாற்றுத்தலைவர்களாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், தி.மு.க.வை சேர்ந்த காதர் பாட்சா முத்துராமலிங்கமும், அ.தி.மு.க.வை சேர்ந்த தளவாய் சுந்தரமும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பட் டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்தலைவர்கள் 6 பேரில், 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com