சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on: 

கரூர்,

கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாளபட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 43). இவர் நேற்று முன்தினம் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் மணிமேகலையின் பின்னால் வந்ததாக தெரிகிறது. திடீரென மர்மநபர்கள் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com