தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தூத்துக்குடி,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. மேலும், அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com