வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com