தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்து. 8 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் - 39.13%, நகராட்சிகளில் - 53.49%, பேரூராட்சிகளில் - 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே 5 மணிக்கு பொது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சூழலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியானது. அதில் சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆவடி மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி 45.98 சதவீதம், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

பேரூராட்சி - 74.68 சதவீத வாக்குகள் ; நகராட்சி - 68.22 சதவீத வாக்குகள் ; மாநகராட்சி - 52.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

கோவை மாவட்டம் - 59.61%

திண்டுக்கல் - 70.65 %

திருப்பூர் - 60.66 %

நாமக்கல் - 76.86 %

விருதுநகர் - 69.24 %

ராணிப்பேட்டை - 72.24 %

மதுரை - 57.09 %

தஞ்சை - 66 %

மயிலாடுதுறை - 65.77 %

நாகை - 69.19 %

ராமநாதபுரம் - 68.03 %

கள்ளக்குறிச்சி - 74.36 %

திருவாரூர் - 68.25 %

அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com