கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டில் விபத்தில் 633 பேர் இறந்துள்ளனர்

மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விபத்தில் 633 பேர் இறந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டில் விபத்தில் 633 பேர் இறந்துள்ளனர்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரு, சேலம், சென்னை உள்பட 5 தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இந்த சாலைகளில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலைகளில் தினமும் விபத்துக்களும், அடிக்கடி உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் இந்த சாலைகளில் மொத்தம் 602 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் மொத்தம் 633 பேர் இறந்துள்ளனர். 593 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 1484 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com