மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை திருட்டு

மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை, ரூ.48 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மீஞ்சூரில் செல்போன் கடைக்காரர் வீட்டில் 68 பவுன் நகை திருட்டு
Published on

மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.கே.ஆர் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தேன்பிரபாகர் (வயது 30). இவர் மீஞ்சூர் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல காலையில் கடைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வெளியூர் சென்றிருந்தார். இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்த தேன்பிரபாகர் தாய் தங்கலட்சுமியுடன் வீட்டை உள்தாழ்பாள் போட்டு தூக்கினார். நேற்று காலை தாய் தங்கலட்சுமி எழுந்து கதவை திறக்க வந்துபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகனிடம் தெரிவித்தார்.

பிரபாகர் வீட்டில் ஏதும் திருட்டு போனதா என பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 68 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரபாகர் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடையங்களை சேகரித்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com