

சென்னை,
தாய்லாந்தில் சென்னைக்கு வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2 வடமாநில பெண்கள் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்களையும் போலீசிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பெண்களும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.