6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
Published on

சென்னை,

கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டுக்கான (2023-2024) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்த கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி தேர்வு கால அட்டவணையை தற்போது முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ் வெளியிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரையும், அரையாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.

இதுதவிர 10, 11, 12-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் இதனை பின்பற்றி மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com