7 கார்கள், 22 ஜீப்புகள்: பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள்

7 கார்கள், 22 ஜீப்புகள்: பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
7 கார்கள், 22 ஜீப்புகள்: பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டிற்கான பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய கார்கள் மற்றும் ஜீப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறையின் தலைமை கட்டிட கலைஞர், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான 7 புதிய கார்கள் மற்றும் 22 புதிய ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 5 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி அனைத்து வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com