தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Published on

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பிரியங்கா (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் (ஐஏஎஸ்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை செயலாளராக பானோத் ம்ருகேந்தர் லால் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூகநல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சஜ்ஜன்சிங் ரா சவான் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக ஸ்ரீவெங்கடபிரியா (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வு துறை கூடுதல் செயலாளராக பாலசுப்பிரமணியம் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com