வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி
Published on

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com