கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் தற்காலிக பணி நீக்கம்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் தற்காலிக பணி நீக்கம்.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் தற்காலிக பணி நீக்கம்
Published on

சென்னை,

டாஸ்மாக் சென்னை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் தலைமை அலுவலக மேலாண்மை இயக்குனர் உத்தரவின்பேரில் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள 2 உயர் ரக மதுபான கடைகளில் அதிகபட்ச விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது மதுபானங்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதால் கடை பணியில் இருந்த 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 5 கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com