கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 72 பேர் கைது

கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 72 பேர் கைது
Published on

குடியரசு தினவிழாவையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனாலும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். திருச்சி மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபாட்டிலகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மாநில 180 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயராமன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com