ஒரே நேரத்தில் பூத்த 8 பிரம்ம கமலம் மலர்கள்

பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்.
பிரம்ம கமலம் பூ
Published on: 

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 பிரம்ம கமலம் மலர்கள் பூத்தது.

பிரம்ம கமலம் பூ

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நீதிமன்ற ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டில் பிரம்ம கமலம் பூஞ்செடியை வளர்த்து வருகிறார். இந்த பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் வளர்க்கப்படும் பிரம்ம கமலம் செடியில் ஒரே நேரத்தில் 8 பிரம்ம கமலம் மலர்கள் பூத்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருகில் உள்ளவர்களும இவரது வீட்டிற்கு வந்து, பிரம்ம கமலம் மலர்களை பார்த்து ரசித்தனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com